நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Selvan
24 November 2024, 12:01 pm

அஜித்தின் அடுத்தடுத்து படங்கள்

தமிழ் சினிமாவில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் நடிகர் அஜித்.சினிமா மட்டுமின்றி பைக் ரேஸ்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல்,சமையல் என பல விதமான துறைகளில் கால் பதித்து கலக்கி வருகிறார்.இவருடைய பிரியாணிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

Ajith shooting schedules

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் ,மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார்.கடந்த ஒரு வருடத்திற்கு மேல் இத்திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்க: சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!

இதற்கு நடுவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகி அந்தப் படத்தின் ஷூட்டிங்கும், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடந்துவருகிறது. அந்த இரண்டு படங்களிலுமே அஜித் மும்முரமாக நடித்துவருகிறார்.

தற்போது அஜித் குறித்த ஒரு புது அப்டேட் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் பல்கேரியா ஷூட்டிங் முடிந்த நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி ரேஸில் ஈடுபடவுள்ளார்.

Ajith racing and movies

இதன்பின்பு 7 நாட்கள் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் வேலைகளை முடித்து,விடாமுயற்சி படத்தின் மீதி காட்சிகளில் நடிக்க உள்ளார்.

அடுத்த வருடம் எடுத்த திடீர் முடிவு

அதன்பிறகு அடுத்த வருடம் ஜூலை வரை எந்த படங்களுக்கும் கமிட் ஆகமாட்டேன் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.தன்னுடைய கார் ரேஸில் மும்மரமாக ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் ஜூலை பிறகே,அடுத்த படத்தை பற்றி யோசிக்கலாம் என சினிமா வட்டாரங்களுக்கு bye bye சொல்லியிருக்கிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 89

    0

    0