கைவிடப்படும் விடாமுயற்சி?.. லைகா எடுத்த முடிவால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Author: Vignesh
16 March 2024, 2:45 pm

பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ajith-updatenews360

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. வானிலை மோசம் அடைந்ததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பிட அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Ajith

இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும், தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பார்க்காத விதமாக அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது.

அதாவது, அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

ajith-updatenews360

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிட போவதாக கூறப்பட்டுள்ளது. லைகாவிடமிருந்து விடாமுயற்சி படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் வாங்கிக் கொள்ளப் போவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. திரை வட்டாரத்திலும் சமூக வலைதளத்திலும் இந்த தகவல் பேசப்பட்ட வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 269

    0

    0