ஸ்டைலோ “ஸ்டைல்”…விடாமுயற்சி படத்தில் அஜித்தின் புது கெட்டப்ப பாருங்க…அசந்து போவீங்க..!
Author: Selvan17 December 2024, 6:58 pm
சமூகவலைதளங்களை கலக்கும் அஜித்
ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார் நடிகர் அஜித்.சமீபத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித்தின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியது.
தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித்தின் ஒரு அழகான போட்டோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.அஜித் குமார், த்ரிஷா இணைந்து நடித்து வரும் “விடாமுயற்சி” திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக லைகா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதையும் படியுங்க: விவாகரத்து நடிகைக்கு பண்ணை வீடு …பாசத்தை பொழிந்த தயாரிப்பாளர்…எங்கேயோ இடிக்குதே..!
இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ,அஜித் குமார் தனது க்ளாசிக் “குட் பேட் அக்லி” லுக்குடன் தொடர்ந்து இந்த படத்திலும் நடிக்கிறார்.
இதில் கோட்-சூட் அணிந்து ஜேம்ஸ் பாண்ட் ஃபேஷனில் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களை மிகவும் பரவசமாக்கியுள்ளது.அதுவும் நடிகை த்ரிஷாவின் கையை பிடித்து கொண்டு அஜித் இருக்கும் காட்சிகள் பார்ப்பதற்கு அவ்ளோ அழகா இருக்கிறது.
Ajith Kumar and Trisha dazzle together at the Vidaamuyarchi shooting spot. ❤️ #VidaaMuyarchi From Pongal 2025 #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/TWNe8DS3PY
— Lyca Productions (@LycaProductions) December 17, 2024
எதிர்பாக்காத நேரத்தில் அஜித்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி சமூகவலைத்தளங்களை திணறிடித்து வருகிறது.