அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
Author: Selvan28 December 2024, 8:37 pm
தாய்லாந்து கலாச்சாரத்தை கொண்டுவந்த SAWADEEKA பாடல்
தமிழ் சினிமாவில் அஜித் படம் ரிலீஸ் ஆக போகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்,அந்த வகையில் நீண்ட நாட்களாக ஷூட்டிங் நடைபெற்று இருந்த விடாமுயற்சி திரைப்படம் ஒரு வழியாக பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இதனால் செம குஷியில் இருந்த அஜித் ரசிகர்கள் படத்தின் அடுத்தடுத்து அப்டேட்க்காக காத்திருந்தனர்.ரசிகர்கள் நினைத்த படியே படக்குழுவும் மாஸான அப்டேட்களை கொடுத்து சோசியல் மீடியாவை திணறடித்தது.
இதையும் படியுங்க: போடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
அந்த வகையில் நேற்று வெளிவந்த விடாமுயற்சி SAWADEEKA பாடலை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.ஆனால் பலருக்கும் பாட்டின் டைட்டில் அர்த்தம் என்னவா இருக்கும் என தேடி வந்தனர்.ஒரு சிலர் அட வசனமடா முக்கியம் அங்கே அஜித் அழக பாருடா…அவர் டான்ஸ் ஸ்டைலை பாருடா….என வைப் பண்ணிட்டு வந்தனர்.
Pure vibe material! 🕺💃 #Sawadeeka ❤️ hits 1️⃣ Million views on YouTube. Keep tripping! ⚡
— Ramesh Bala (@rameshlaus) December 27, 2024
🔗 https://t.co/4yw4tlWVFI https://t.co/Bj2uKvvgxc
ஆனால் அனிருத் வித்தியாசமாக யோசித்து உள்ளார்,அதாவது SAWADEEKA என்றால் தாய்லாந்து மொழியில் வணக்கம் என்று அர்த்தமாம்,தாய்லாந்து மக்கள் பிறரிடம் பணிவாக பேச ஆங்கிலத்தில் hai,helo வார்த்தைகள் மாதிரி இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த பாடலும் கணவன்-மனைவி உறவை குறிக்கிற மாதிரி வந்துள்ளதால்,கணவன் மனைவியிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என உள்நோக்கத்தில் இந்த வார்த்தை பயன்படுத்திருக்கலாம் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.