விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!

Author: Selvan
15 January 2025, 10:19 pm

தமிழ் சினிமாவில் இந்த வருடம் பொங்கல் அன்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது அஜித் நடித்த விடாமுயற்சி தான்,நீண்ட நாட்களாக இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடந்த நிலையில் படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

Vidamuyarchi Trailer Announcement

இந்த நிலையில் அஜித் தன்னுடைய அடுத்த படமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்து,அப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதையும் படியுங்க: தெலுங்கில் அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபு…படத்தின் டீசரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து..!

ஆனால் விடாமுயற்சி பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்தது.இதனால் படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் சூழலில்,தற்போது அஜித்தின் ட்ரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த விடாமுயற்சி ட்ரைலர் நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளது.அதில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு சர்ப்ரைஸ் ஆக தெரிவிக்கலாம் என தெரிகிறது.இதன்மூலம் அஜித் ரசிகர்கள் நாளை மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட ஆவலுடன் இருக்கின்றனர்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!
  • Leave a Reply