இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!
Author: Selvan13 January 2025, 10:38 pm
நீங்க எப்போ உங்க வாழ்க்கையை வாழ போறீங்க
நடிகர் அஜித் சமீப காலமாக தன்னுடைய ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை கூறி வருகிறார்.இந்த நிலையில் தற்போது அஜித் துபாய் ரேஸில் கலந்துகொண்டு ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: இது துபாயா இல்ல…கோடம்பாக்கமா…அஜித் கார் ரேஷை பார்க்க போன திரைப்பிரபலங்கள்..!
ஏற்கனவே துபாய் கார் ரேஸ் நடந்து கொண்டிருக்கும் போது,அஜித் தனியாக ரசிகர்களுக்காக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர்,நீங்கள் உங்களுடைய குடும்பத்தை பாருங்க,கடின உழைப்போடு வேலை பாருங்க,படிக்குற பசங்க நல்லா படிங்க என கூறி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவர் ஆங்கில ஊடகத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் ரசிகர்களை பார்த்து நீங்கள் அஜித் வாழ்க..விஜய் வாழ்க என கூறிட்டு இருந்தால்,நீங்க எப்போ வாழ போறிங்கனு நச்சுனு ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
Ajith vaazhga Vijay vaazhga
— pravee (@prvnsey) January 13, 2025
Neenga epa vaazha poreenga 😭😭 pic.twitter.com/smfJjk0Cf1
எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் பார்க்கிறோம்,உங்க வாழ்க்கை மற்றும் உங்களுடைய குடும்பத்தை நீங்கள் தான் பார்க்க வேண்டும்,எங்கள் பின்னாடி கோஷங்கள் எழுப்பி,உங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கி,வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என மறைமுகமாக அன்பு கட்டளை விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே,எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் எனவும்,என்னை தல அல்லது வேறு ஏதாவது பெயரை அடைமொழி வைத்து கூப்பிட வேண்டாம் என கூயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.