நடிப்பில் ஆர்வம் இல்லாத அஜித்… கிடப்பில் போடப்பட்ட “விடாமுயற்சி”? Bike-லே சுத்திட்டு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரோ?
Author: Shree10 June 2023, 11:22 am
அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கிவிட்டனர். சரி என்ன தான் பிரச்சனை? அஜித் ஏன் தொடர்ந்து படத்திற்கு தடங்கல் விதிக்கிறார் என கேட்டதற்கு பதில் அளித்த பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ” அஜித்திற்கு இப்போது நடிப்பதில் ஆர்வமே இல்லை. இன்னும் விடாமுயற்சி படத்தின் ஸ்க்ரிப்டை கூட முழுமையாக கேட்கவில்லையாம் அஜித். அவர் தற்போது லண்டனில் இருக்கிறராம். திரும்பி வருவதற்கு கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆகும் என கூறியுள்ளார். நடிக்க விருப்பமே இல்லாத அஜித் ஏன் அடுத்தவர்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் அஜித் உலகம் முழுக்க Bike-லயே சுத்திடு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு போல என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறி அதிர்ச்சியளித்துள்ளர்.
https://www.instagram.com/reel/CtQ11S_uFnf/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==