ஏழ்மையில் தத்தளித்த அஜித்… பிரபலத்தின் பழைய ஆடைகளை அணிந்து நடித்த கொடுமை!
Author: Shree1 May 2023, 11:02 am
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அஜித் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மெக்கானிக் வேலை செய்துவந்தார். அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அப்போது பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.
இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார். பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். ஆம், எஸ்பிபியின் மகன் சரணின் நெருங்கிய பள்ளி தோழனாக அஜித் இருந்துள்ளர். அப்போது அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்ல எஸ்பிபியின் குடும்ப நண்பராகியுள்ளார்.
ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அஜித் நண்பன் எஸ்பி சரணின் ஆடைகளை வாங்கி அணிந்துக்கொண்டு நிறைய விளம்பரங்களில் நடித்திருக்கிறாராம். அதன்பிறகு ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தில் எஸ்பிபி தான் அஜீத்தை அறிமுகம் செய்து வைத்தார். அன்று ஏழ்மையில் தத்தளித்த அஜித் இப்போது பெரிய ஹீரோவாகி விட்டார்.