ஸ்லிம் லுக்கில் ஸ்மார்ட் அஜித்.. விடாமுயற்சிக்காக 10 கிலோ வெயிட் லாஸ்.. அசரவைத்த புகைப்படம்..!

Author: Vignesh
12 December 2023, 1:30 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ajith-updatenews360

அதன் பின்னர், படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.

பின்னர், அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே, நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இப்படத்தில், அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி சங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

நடிகர் அஜித்தின் உடலை கிண்டல் செய்து பலரும் அவ்வப்போது, சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். இந்நிலையில், அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில், தனது உடல் எடையை பாதியாக குறைத்து மிகவும், ஸ்லிம்மாக மாறியுள்ளார். நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக தான் தனது, உடல் எடையை 10 கிலோவரை அஜித் குறைத்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்றபோது, நடிகருடன் எடுத்துக்கொண்ட அஜித்தின் புகைப்படம் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ajith-updatenews360
  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?