விடாமுயற்சிக்காக உடல் எடையை குறைத்துகொண்டே வரும் அஜித்.. -லேட்டஸ்ட் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்..!
Author: Vignesh25 May 2023, 1:00 pm
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு எந்த வித பந்தாவும் இல்லாமல் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் டாப் நடிகரான அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் AK 62 டைட்டில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம்.
விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், உடல் எடை கூடியிருந்த நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல் வெளிவந்தது.
இந்நிலையில், அஜித் தனது ரசிகருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் சற்று உடல் எடையை குறைத்தது போல் அஜித் தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.