இனிமே எல்லாம் போட்டி தான் – லியோவுக்கு செக் வச்ச அஜித் – வேகம் காட்டும் லைக்கா!

Author: Shree
11 March 2023, 9:34 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது தனது 62வது படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து விஜய்யுடன் மோதி வெற்றிகளை குவித்து வருகிறார்.

கடைசியாக வாரிசு படத்துடன் மோதிய அஜித்தின் துணிவு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளியது. இதனால் போட்டியிட்டு ஜெயிப்பதில் அஜித்துக்கு ஆர்வம் அதிகம் வந்துவிட்டதாம்.

இந்நிலையில் லியோ படத்துடன் தனது 62 படம் வெளியாக வேண்டும் என்றும் அதற்காக படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடிக்கவேண்டும் என்றும் லைக்கா நிறுவனத்துக்கு அஜித் கண்டீஷன் போட்டுள்ளாராம்.

ஏற்கனவே இயக்குனர் மாற்றத்தால் அதிக கால தாமதம் ஆகிவிட்டதால் இப்போது நாட்கள் குறைவாகவே உள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட பாதி ஷூட்டிங்கை முடித்துவிட்டார். இதனால் அஜித் தீவிரம் காட்டி விஜய் உடன் மோத காத்திருக்கிறாராம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 639

    3

    2