விஜய்க்கு வாழ்த்து கூறிய அஜித்? என்ன வார்த்தை சொல்லிருக்காருனு பாருங்க..!!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2025, 2:25 pm
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த வருடம் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். இவர் நடத்திய கட்சி மாநாடு தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது கட்சியை பலப்படுத்த நிர்வாகிகளுக்கு புதிய பதவிகளை அளித்து வருகிறார். இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படியுங்க: ஸ்டூடண்ட்டை கரம் பிடித்த விஜய் டிவி பிரபலம்….ஜாம் ஜாம்னு முடிந்த திருமணம்…!
பிப்ரவரி 2ஆம் தேதியான நேற்று கட்சி தொடங்கி ஒரு வருடம் முடிந்து, 2ஆம் ஆண்டை எட்டி வருவதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பல பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் அஜித் வாழ்த்து கூறியுள்ளார். போனில் விஜய்யை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் சென்னை வந்ததும் நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
கார் பந்தயத்தில் அஜித் வென்றது, அவருக்கு பத்ம விருது அறிவித்தது முதல் விஜய் வாழ்த்து கூறியிருந்த நிலையில், தற்பேோது அஜித் வாழ்த்து கூறியுள்ளது சினிமா உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.