சஞ்சயிடம் பேசிய அஜித்.. தந்தையாக விஜய் கூட இதை செய்யவில்லை..!

Author: Vignesh
24 January 2024, 10:13 am

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை தற்போது சைலெண்டாக லைக்கா நிறுவனம் போட்டுள்ளார்களாம். அந்த பூஜையில் விஜய் பங்கேற்காததை வைத்து பலர் கண்டபடி செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் யார் மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை வெளிவந்த தகவலின் படி கவின் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது. மேலும், இப் படத்திற்கான பிஆர்ஓவாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ajith vijay -updatenews360

விஜயின் மகன் படத்திற்கு எப்படி நாம் பிஆர்ஓவாக இருப்பது என முதலில் சுரேஷ் தயங்கியுள்ளார். பின்னர் அஜித்துடன் இதுகுறித்து பேசியுள்ள அவர் இதற்கு அஜித் தாராளமாக போய் பண்ணுங்க எனக்கு கூறினாராம். அதுமட்டுமின்றி சுரேஷ் சந்திராவிடம் விஜயின் மகன் சஞ்சையின் போன் நம்பரை வாங்கி கால் செய்து பேசியுள்ளார். அப்போது, அறிமுகப்படத்திற்காக தனது வாழ்த்துக்களையும் சஞ்சயிடம் அஜித் கூறியுள்ளார்.

சஞ்சையின் புதிய பட அறிவிப்பு வெளிவந்த பின்னர் விஜய் இதுவரை தனது சமூக வலைதளத்தில் அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ இதுகுறித்து பேசவில்லை. இதனால், சினிமாவில் தனது கேரியரை துவங்கும் தனது மகனுக்கு விஜய் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் தனது மகனுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததாக, இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை அது குறித்து இதுவரை தகவல் வெளிவராமல் இருப்பதற்கு வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்குமோ என இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தற்போது பகிர்ந்து கொண்டார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 293

    0

    0