ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை: மைத்ரி மூவிஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
முன்னதாக, படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால், அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முந்தைய படம் நிவர்த்தி செய்யாததால் குட் பேட் அக்லி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
காரணம், கடைசியாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோரது நடிப்பில் வெளியான விடாமுயற்சி, வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது. ஏன், விமர்சன ரீதியாகவும் Breakdown படத்தின் ரீமேக் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குட் பேட் அக்லி: மேலும், ஆக்ஷன், பில்டப் காட்சிகள் என எதுவும் இல்லாததலும், இப்படம் பெரிதாக கொண்டாடப்பட முடியாமல் போனது. இதனிடையே, தனுஷின் இட்லி கடை படம் ரிலீஸின் போது குட் பேட் அக்லி வெளியாவதால், அஜித்குமாரின் சினிமா கரிய இத்துடன் முடிவடைந்துவிடும் என்றும் தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கூறி வருவதால் மோதல் போக்கு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
ஆனால், ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தையப் படங்களைப் போல இப்படமும் மாஸ் மசாலா கலந்து மங்காத்தா போன்று இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அடுத்த ஆண்டே தனது அடுத்த படம் குறித்து அஜித் குமார் யோசிக்க உள்ளதால், குட் பேட் அக்லி படத்தின் தாக்கத்தைப் பார்த்த பிறகே, தனது அடுத்த கதையினை அஜித் தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.