நீங்க படத்த பாருங்க.. நான் ரேஸ பாக்குறேன்.. அஜித்தின் வீடியோ வைரல்!
Author: Hariharasudhan6 February 2025, 8:53 am
விடாமுயற்சி வெளியாகி திரையரங்குகளில் திருவிழாக்கோலம் காணும் நிலையில், அஜித் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
சென்னை: ஒருபக்கம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது விருப்பமான நடிகரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என ரசிகர்கள் காலை முதலே காத்திருக்க, மறுபக்கம், ரேஸ் நண்பர்களுடன் போர்ச்சுகலில் ரேஸ் பயிற்சியில் அஜித்குமார் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, 24H துபாய் 2025-இன் 991 பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அஜித் குமார் அணி சாதனை படைத்தது. இந்த நிலையில், அடுத்ததாக, தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 போர்ஷே ஸ்பிரிண்ட் சவாலின் முதல் சுற்றுக்கான பயிற்சியை அஜித் தொடங்கியுள்ளார்.
எதிர்வரும் ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’-இல் பங்கேற்க அஜித்குமார் ஏற்கனவே போர்ச்சுகலில் முகாமிட்டு உள்ளார். அங்கு அவர், தனது பயற்சியாளரிடம் உரையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், இந்தப் போட்டி இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு பந்தயமும் சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும். இந்தப் போட்டியில், அதிகபட்சமாக 30 கார்கள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்படுவதால், இந்தத் தொடர் ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!
இதனிடையே, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.