அதே கர்ஜனை.. மூவர்ணக்கொடியுடன் மீண்டும் முடிசூடிய அஜித்குமார்.. வைரலாகும் ‘அந்த வீடியோ’!
Author: Hariharasudhan24 March 2025, 9:43 am
இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12H ரேஸில் GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த நிலையில், இந்தியக் கொடியோடு மேடையேறிய அஜித்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை: இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளது, நடிகர் அஜித்குமாரின் Ajithkumar Racing அணி. இத்தாலியின் Mugello சர்கியூட்டில் நடைபெற்ற 12H ரேஸில் அவரது அணி பங்கேற்றது. இதில் அஜித்குமார் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியப் பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித்குமார் இந்திய மூவர்ணக்கொடி உடன் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், கார் ரேஸில் தொடர் வெற்றியைக் குவித்து வரும் அஜித்துக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
முன்னதாக, ‘அஜித் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கியுள்ள அஜித்குமார், சமீபத்தில் துபாயில் நடந்த ரேஸில், அவரது அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. பின்னர், போர்ச்சுக்கல்லில் நடந்த ரேஸிலும் அஜித் ரேஸிங் அணி கலந்துகொண்டது.
மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: ரவுடி சரித்திரப் பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர்.. திமுகவில் படித்துவிட்டு.. அண்ணாமலை கடும் தாக்கு!
அதற்கு முன்னதாக, மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியானது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே, ரேஸ் களத்தில் அஜித்குமார் தலைமையிலான அணி ஜொலித்து வருகிறது.