அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் டபுள் ட்ரீட்.. இனி சரவெடிதான்!

Author: Hariharasudhan
19 February 2025, 11:07 am

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் இம்மாத இறுதியில் வெளியாகும் என பட விநியோகஸ்தர் ஒருவர் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

சென்னை: அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் விநியோகிஸ்தரான ராகுல், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “கொஞ்சம் நாள் பொறு தலைவா.. குட் நியூஸ் ஆன் தி வே மாமே” என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து அறிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமாரின் 63 வது படமாக குட் பேட் அக்லி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

Good Bad Ugly movie teaser

தற்போது படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 270 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான், தற்போது படத்தின் டீசர் இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

இதையும் படிங்க: அடி வாங்கிய விடாமுயற்சி.. வருத்தத்தில் அஜித் ரசிகர் : ஆறுதல் கூறிய ஜிவி பிரகாஷ்!

மேலும், குட் பேட் அக்லி படத்தில் நடிகை சிம்ரன் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, அவள் வருவாளா, வாலி மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply