அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்களையே Twitter Review-இல் பெற்று வருகிறது.
சென்னை: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்குமாரின் திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் நேற்று இரவே படம் வெளியானது. அதேபோல், கேரளா உள்பட சில மாநிலங்களில் இன்று அதிகாலையே படம் வெளியாகியது.
அதேநேரம், தமிழ்நாட்டில் முதல் காட்சிக்கு இப்போதுதான் ரசிகர்கள் படையெடுத்துள்ளனர். அதிலும், சில பகுதிகளில் விடாமுயற்சி வெளியாகி ரசிகர்களின் பேராதரவினைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.
அதில், ராஜ் என்ற பெயர் கொண்ட எக்ஸ் தள பயனர், “சலிப்பை உண்டாக்கும் காட்சிகள் இல்லை, படத்தொகுப்பு கச்சிதமாக உள்ளது, ஒளிப்பதிவு, படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது, நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம், மொத்தத்தில் விடாமுயற்சி முதல் பகுதி அருமையாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிஷாந்த் ராஜராஜன் என்ற எக்ஸ் தளப் பயனர், “காட் மோடில் (God Mode) அஜித்குமார் நடித்துள்ளார். படத்தின் சுவாரஸ்யத்தை ஒவ்வொரு இடத்திலும் அவர் கட்டமைக்கிறார், திரையில் அவர் ஒரு ராஜா தான், வழக்கமான பூமர் வசனங்களுக்கு அஜித்குமாரின் பதில் தெறிக்கவிடுகிறது, சத்தியமாக, ஒளிப்பதிவு ஹாலிவுட்டைத் தாண்டி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இப்படம் பிரேக்டவுன் (Breakdown) என்ற படத்தின் ரீமேக் என்றும், அதில் பிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே இணைத்துள்ளதாகவும் சிலர் பேட்டிகள் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவை பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க படத்த பாருங்க.. நான் ரேஸ பாக்குறேன்.. அஜித்தின் வீடியோ வைரல்!
இதனிடையே, கிறிஸ்டோபர் கனகராஜ் என்ற எக்ஸ் தளப் பயனர், “அஜித்குமார் திரையில் நன்றாக ஜொலித்துள்ளார். அஜித் – த்ரிஷா காட்சிகள் மந்தமாக இருக்கின்றன, அர்ஜுன் மற்றும் ரெஜினா போதுமானது, இசையும் சரியானது, பாடல்கள் நன்றாக உள்ளது, அஜர்பைஜான் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
பலவீனமான கதை, உணர்ச்சிகள் இல்லை, ட்விஸ்ட்கள் இல்லை, கதை சொல்லும் விதம் தொய்வாக இருக்கிறது, ஸ்டைலான களத்தினுள்ளே பொருள் இல்லை, முழுவதுமாக ஏமாற்றமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். இதற்கு, ‘விடாமுயற்சி – வீண்முயற்சி’ எனக் கூறிக்கொண்டு கிறிஸ்டோபர் வருவான் என மீம்ஸ்கள் வந்ததை அவரும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.