வசூலை வாரிக் குவிக்கும் விடாமுயற்சி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Author: Hariharasudhan
7 February 2025, 11:55 am

அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் முதல்நாளில் மட்டும் இந்திய அளவில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம், 1997ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க படமான பிரேக்டவுன் படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம், நேற்று உலகமெங்கும் வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக தனது முந்தைய படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறார் அஜித்குமார். ஆம், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தின் சாதனையை விடாமுயற்சி முறியடித்துள்ளது.

இதன்படி, Sacnilk தரவுகளின்படி, இப்படம் இந்திய அளவில் 22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதிலும், தமிழகத்தில் மட்டும் 21.05 கோடி ரூபாயும், தெலுங்கில் 0.5 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தென் அமெரிக்காவில் 440 ஆயிரம் டாலர்கள் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajithkumar Vidaamuyarchi Box Office Collection Day 1

விடுமுறை இல்லாத வேலை நாளிலும் 20 கோடியைத் தாண்டி விடாமுயற்சி வசூல் செய்தது பெரிய விஷயம் என்கின்றனர் சினிமா வணிகவியலாளர்கள். எனவே, அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் உள்ள நிலையில், விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே இரவில் அந்தர்பல்டி அடித்த விக்கி.. கடுப்பான அஜித் ரசிகர்கள்!

மேலும், சென்னையில் மட்டும் 2.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள விடாமுயற்சி, மற்ற மெட்ரோ மாவட்டங்களில் 50 லட்சம் ரூபாயைத் தாண்டியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி, த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அனிருத், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட பலரும் நேற்று தியேட்டர்களில் பார்த்தனர்.

  • My career gone after acted in Ajiths Veeram Movie வீரம் படத்துல நடிச்சு என்னோட கெரியரே போச்சு.. புலம்பும் நடிகை!
  • Leave a Reply