படம் நல்லா வந்த மாதிரி தான்.. இயக்குநருடன் சண்டைக்கு நிற்கும் அஜித்?..

Author: Vignesh
18 June 2024, 11:00 am
ajith-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவது நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு. தற்போது, இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்துள்ளார். இதில், மகிழ்திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியது.

ajith-updatenews360

மேலும் படிக்க: காஸ்ட்லி வில்லனான பகத் பாசில்… புஷ்பா 2 -வில் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?..

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலா வர தொடங்கியுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனிக்கும் அஜித்திற்கும் இடையே படம் தொடங்கிய சில நாட்கள் இருந்து சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்துள்ளதாம். ஒரு சில காட்சிகளில் அஜித் மிகப் பெரிய மாற்றம் செய்யும் அளவிற்கு திருத்தங்கள் கூறியதாகவும், ஒரு சில காட்சிகளில் அஜித்தின் நடிப்பில் திருப்தியில்லாத போது மகிழ்திருமேனி மாற்று கருத்து கூறியதாகவும், இது இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ajith-updatenews360

மேலும் படிக்க: என்ன சாதிக்க போறீங்க.. சாதி மறுப்பு திருமணம்.. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி..!

இதனால், மீதமுள்ள படப்பிடிப்பில் அவுட்டோரில் எடுக்கும் காட்சிகளை மட்டும் அஜர்பைஜானில் எடுத்துக் கொள்ளுங்கள் மீதி படத்தை சென்னையில் செட் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் அஜித் கூறியதாகவும் கூறப்படுகின்றது. இது லைக்கா நிறுவனத்திற்கு கூடுதல் செலவை தரும் என்பதால், லைக்காவுக்கு நடுவே இது புதிய தலைவலியாக மாறியுள்ளது. லைக்கா நிறுவனம் அஜித்தை தங்கள் வழிக்கு கொண்டுவர என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

Views: - 81

0

0

Leave a Reply