பீகாரில் மாஸ் காட்டும் விடாமுயற்சி.. தவிடுபொடியாகும் முந்தைய சாதனைகள்!

Author: Hariharasudhan
6 February 2025, 10:25 am

அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி, தமிழ்நாட்டை விட பீகாரில் இதனைக் காண ஆர்வமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை: அஜித்குமார் சொன்னது போல் விடாமுயற்சி திரைப்படம் வெளியான இன்று தான் அவரது ரசிகர்களுக்கு பொங்கம் பண்டிகை போல, ஏனென்றால், விடமுயற்சி வெளியான அனைத்து தியேட்டர்களிலும் அஜித் ரசிகர்கள், பட்டாசு வெடித்து, பிரமாண்ட கட்-அவுட்களுக்கு மாலையிட்டு, மேளம் அடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், விடாமுயற்சி படத்தின் விமர்சனங்களும் ரசிகர்கள் வாயிலாக நேர்மறையாகவே உள்ளது. இதனிடையே, இதுபோன்ற திரைவிமர்சனங்களுக்கு மத்தியில் சில கலவையான விமர்சனங்களும் வந்து செல்கின்றன. எது எப்படி இருந்தாலும் அஜித்குமாரின் திரை தரிசனத்திற்காக ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக சென்று வந்தனர்.

இந்த நிலையில், Sacnilk வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, மொத்தம் 7 லட்சத்து 15 ஆயிரத்து 631 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 13.39 கோடி ரூபாய் முன்பதிவு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேநேரம், விடாமுயற்சி படத்திற்கு 9 மணி சிறப்புக் காட்சிக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது.

Ajithkumar Vidaamuyarchi box office in Bihar

ஆனால், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகாலைக் காட்சிகளும் வெளியாகியது. இதனால் தமிழ்நாட்டை விட பீகாரில் விடாமுயற்சி படம் வெளியாகி, அங்குள்ள ரசிகர்கள் பேராதரவைத் தருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும், இப்படம் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மாஸ் காட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Vidaamuyarchi Twitter review: சாதித்தாரா அஜித்குமார்? விடாமுயற்சி விமர்சனம்!

மகிழ் திருமேனி இயக்கி உள்ள இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். அனிருத் இசையில் வெளியான பத்திக்குச்சு மற்றும் Sawadika ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?