தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். ஐதராபாத்தில் தந்தை சுப்பிரமணியம் – தாய் மோகினிக்கு மகனாக 1971ல் பிறந்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த அஜித் தன் தாய் தந்தையரை சென்னையில் வைத்து பார்த்து வந்தார். இதனிடையே நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திடீரென இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார். இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.