யங் லுக்கில் ஸ்டைலிஷ் அஜித்… ஆரவ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

Author: Rajesh
12 January 2024, 8:58 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.

பின்னர் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படக்குழுவினர் திடீரென சென்னை திரும்பினர். பின்னர் மீண்டும் அஜர்பைஜனில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதனிடையே அஜித் புத்தாண்டு விடுமுறை, மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் என கொஞ்சம் பிரேக் எடுத்திருந்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பிக்பாஸ் ஆரவ் இணையத்தில் வெளியிட செம வைரலாகி வருகிறது. அதில் பிட்டான தோற்றத்தில் பார்க்க மிகவும் இளமையாக இருக்கிறார் அஜித். இந்த லேட்டஸ்ட் புகைப்படம் அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 383

    0

    0