AK-62 படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் இத்தனை கோடிகளா..? அள்ளிக்கொடுக்கும் தயாரிப்பு நிறுவனம்..!

Author: Rajesh
23 March 2022, 1:33 pm

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தனது கடின உழைப்பால் தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் அஜித், பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.

என்னதான் நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் பைக் ரைடராக இவர் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்றியுள்ளார்.

இதனிடையே, வலிமை படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. பின் அஜித் தனது மகன் பிறந்தநாளை கொண்டாட பிரபல உணவகத்திற்கு வர அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அடுத்து அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அந்த படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் தான் தயாரிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த படத்தில் நடிக்க அஜித் ரூ. 100 கோடி சம்பளம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் லைகா நிறுவனமோ அவருக்கு ரூ. 105 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறி இருக்கிறதாம்.. அதாவது அஜித் கேட்டதை விட 5 கோடி அதிகமாக அவர்களே கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 1457

    7

    0