கடத்தல் தான் கதையா? விடாமுயற்சியுடன் காரசாரமாக விவாதித்து கொள்ளும் நெட்டிசன்கள்,..

Author: Sudha
8 July 2024, 11:39 am

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

மொத்தம் வெளியான மூன்று போஸ்டர்களில் இரண்டு போஸ்டர்களில் ஒரே மாதிரியான உடையை அணிந்திருந்தார் அஜித். இதை வைத்து விடாமுயற்சி ஒரே நாளில் நடப்பது போன்ற கதையாக இருக்குமோ?என்று ரசிகர்கள் தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் மனைவியான நடிக்கும் த்ரிஷாவை வில்லன் கும்பல் கடத்திவிடுகிறது முடிவில் த்ரிஷாவை அஜித் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் விடாமுயற்சி படத்தின் ஒரு வரி கதை என்றும் தகவல்கள் வெளிவந்தன.

விடாமுயற்சி படத்திலிருந்து தற்போது வெளிவந்திருக்கும் போஸ்டர் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

முதல் லுக் போஸ்டர் மிகவும் சாதாரணமாக இருந்தது என ரசிகர்கள் இணையத்தில் பேசிக்கொண்டனர்.எனவே இந்த போஸ்டர் பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அஜித்திடம் பேசி அவர் அனுமதி பெற்றே வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்ட 2 போஸ்டர்களிலும் வழக்கம் போல ஸ்டைலாக இருக்கிறார் அஜித்.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?