விக்னேஷ் சிவனின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?.. ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள முடிச்சிட்டாங்க..!

Author: Vignesh
21 August 2023, 11:05 am

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர், அவரது கதை பிடிக்காததால் AK62 மகழ் திருமேனியிடம் கொடுக்கப்பட்டது.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். பின்னர், அஜித்தின் பிறந்தநாள் அன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் AK62 டைட்டில் “விடாமுயற்சி” என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் த்ரிஷாவை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், ஷூட்டிங் தள்ளிப்போகவே, த்ரிஷா வேறு சில படங்களில் கமிட் ஆனதாக சொல்லப்படுகிறது. இன்னும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தெரியாத நிலை நிலவி வருவதால், தயாரிப்பு நிறுவனமான லைகா கடும் அப்செட் ஆகி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை இந்த வாரம் ஆரம்பித்து விடலாம் என காத்து இருந்த லைகாவுக்கு மீண்டும் அஜித் தரப்பில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமாக தாமதமாகும் என சொன்ன தகவலால் லைகா நிறுவனம் விலகப் போவதாக பரபரப்பு தகவல்கள் கோலிவுட்டில் பரவி வருகிறது.

விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இனிமேல் வேறு ஒரு படத்தில் அஜித் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Ajith Vignesh - Updatenews360

விடாமுயற்சி தொடங்குவதற்கு முன்பே இவ்வாறு தடைப்பட்டு நின்று போனதற்கு விக்னேஷ் சிவன் விட்ட சாபம் தான் காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில், அறிவிப்பு வெளியான பிறகு ஒரு இயக்குனர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டால் அவரது கேரியர் கேள்விக்குறிதான் இப்படி இக்கட்டான சூழ்நிலையை விக்னேஷ் சிவன் சந்தித்ததால் அவரின் வயிற்றெரிச்சலால் தான் இந்த நிலை என ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 467

    0

    0