எல்லாரும் ஓரமா போங்கோ இது எங்களுக்கான நேரம்… விடாமுயற்சி படத்தின் மாஸ் அப்டேட் – குதூகலத்தில் தல Fans!

Author: Shree
17 August 2023, 11:30 am

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தின் ஷூட்டிங் கண்டிப்பாக இந்த மாதமே துவங்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. அதுமட்டும் அல்லாமல் படத்தின் ஷூட்டிங்கை மொத்தம் மூன்று schedule ஆக பிரித்து படமாக்க திட்டமிட்டுள்ளனராம். மேலும் திரில்லர் கலந்த ஆக்ஷன் படமாக விடாமுயற்சி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முதலில் ஹத்ராபாத்தில் துவங்கி பின்னர் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை செம ஹேப்பியாக்கியுள்ளது. ரஜினி , விஜய் எல்லோரும் சீக்கிரம் கிளம்புங்க இது எங்களுக்கான நேரம் என அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்க தயாராக உள்ளனர்.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?