AK 62 படத்திற்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய விக்கி.. இறுதி முடிவு இது தானா?..

Author: Vignesh
3 February 2023, 3:30 pm

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், அமீர், பாவனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி எனவும் சொல்லப்பட்டது.

ajith vignesh_updatenews360

AK 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம், அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கதையை படித்துவிட்டு இதை மாற்று, அதை மாற்று என சொல்லி அஜித் சொல்லுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், AK 62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இந்த படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவம் விலகவிருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விக்னேஷ் சிவனிற்கு பதிலாக விஷ்னுவர்தன் அல்லது யாரேனும் பெரிய இயக்குனர் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரவி வரும் நிலையில், இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

ajith vignesh-updatenews360

ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை இரண்டு தரப்பிலும் கொடுக்கவில்லை. இதனிடையே, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Ajith Vignesh - Updatenews360

அதாவது ஏகே 62 படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த லைக்கா நிறுவனத்திடம் பேச விக்னேஷ் சிவன் லண்டனுக்கு சென்றார். தற்போது பேச்சுவார்த்தை முடிந்து இந்தியாவுக்கு திருப்பிய விக்கி ட்விட்டர் பக்கத்தில் GOOD BYE லண்டன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டை வைத்து பார்க்கும் பொழுது கூடிய விரைவில் ஏகே 62 படத்தை குறித்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 549

    1

    0