கடந்த 11ம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில், அமோக வரவேற்பினை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது. எச். வினோத் – அஜித் கூட்டணியில் மூன்றாவது வெளிவந்த இப்படம் வசூலில் தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது.
இதனையடுத்து அஜித், மகிழ்திருமேனி கூட்டணியில் ஏகே 62 படம் விரைவில் உருவாக உள்ளது. இந்த படத்தை லைக்கா பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும், நீண்ட நாட்களாக ஏகே 62 படத்தை பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை ஏகே 62 படத்திற்காக ஸ்கெட்ச் போட்டு தூக்க உள்ளாராம் இயக்குனர் மகிழ்திருமேனி. நடிகர் அஜித்தின் 62 ஆவது படத்திற்கு இசை அமைக்க இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
மேலும் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். அந்த வகையில் ஏகே 62 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறாராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் மேலும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும் நீரவ் ஷா தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போதே படத்தின் முக்கிய பிரபலங்கள் ஒவ்வொருவராக படக்குழு தேர்வு செய்து வருகிறது. அடுத்ததாக படத்தில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் முனைப்பில் தற்போது மகிழ்திருமேனி செயல்பட்டு வருகிறாராம்.
ஆகையால் இன்னும் சில தினங்களில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் டைட்டிலும் வெளியாகும் என்று நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மற்ற பிரபலங்கள் யார் ஏகே 62 படத்தில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சைலன்ட்டாக AK62 படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளதாம். ஆனால், கதாநாயகன் அஜித் இந்த பூஜைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஏகே 62 படத்திற்கு மொத்தம் மூன்று டைட்டில் தேர்ந்தெடுத்துள்ளதாம். இதில் ஏதாவது ஒரு டைட்டில் மார்ச் மாதத்தின் துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டு, மார்ச் இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.