ஓ அப்பாக்கு தெரியாம இந்த விஷயம் நடந்து இருக்கா.. ரகசியத்தை கூறிய அக்ஷரா ஹாசன்..!

Author: Vignesh
17 July 2024, 10:08 am

கமலஹாசன் மகளாக வாரிசு நடிகை என்ற கெத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். இவர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற கதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் அமிதாபச்சன் தனுஷ் நடிப்பில் வெளியான சமிதாப் படத்திலும் நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார்.

akshara haasan

தற்போது, அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன் மும்பையில் அவருடைய தாயாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

akshara haasan

அந்த பேட்டியில், அப்பாவுக்கு தெரியாமல் ஏதாவது மறைத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த அக்ஷராஹாசன் அதை சொன்னால் இப்போ மாட்டிப்பேனே என்று கூறி ஒரு ரகசியத்தை உடைத்துள்ளார். அதில், என் தோழி ஆட்டோ ஒன்று வைத்திருக்கிறார். அதை வாங்கி வேகமாக சென்று திரும்பினேன். ஆட்டோ தடுமாறு பெல்ட்டி அடித்து சென்றதில், எனக்கு அதிக அடிகள் பட்டது. இதைத்தான் அப்பாவிடம் சொல்லவில்லை என்று தெரிவித்தார். சாரி அப்பா என்று தெரிவித்தும் அக்ஷரா ஹாசன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி