உலகநாயகன் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகையாகவும் , திரைக்கதை ஆசிரியராகவும் , உதவி இயக்குனராகவும் பன்முக திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.இவர் முதன்முதலில் கடந்த 2014 ஆம் ஆண்டில் சமிதாப் என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடித்திருந்தார் .
அதுதான் இவரது முதல் அறிமுக திரைப்படம். முதல் படத்திலேயே அமிதாப்பச்சலுடன் நடித்த மிகப்பெரிய பெருமை கொண்ட அக்ஷரா ஹாசன் அதற்கு முன்னதாக மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் கூட. இந்த வாய்ப்பைத் தவிர்த்து விட்டார் அக்ஷரா ஹாசன். அதன் பிறகு தமிழில் அஜித்குமாருடன் விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் தந்தை கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த சபாஷ் நாயுடு திரைப்படத்தின் உதவி இயக்குனராக இவர் பணி புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது அக்னி சிறகுகள் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு மனதில் பட்டதை மிகவும் தைரியமாக பேசிய அக்சரா ஹாசன்… பெண்கள் பீரியட்ஸ் பற்றி பொது இடங்களில் பேசவே மிகவும் தயங்குகிறார்கள்.
“பீரியட்ஸ் என்பது அபிஷ்டு இல்லை… அது ஒரு சாதாரண விஷயம். நாம் இதன் மூலமாக தான் இந்த உலகத்திற்கே வந்தோம். இது ஒரு உயிர் அதை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். ஆனால், இதை தீட்டு என சொல்கிறார்கள். இதில் இருக்கும் நல்லதைத்தான் நாம் பார்க்க வேண்டும். பார்ப்பவர்களின் பார்வை தப்பாக உள்ளது. அவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை என்று அக்ஷரா ஹாசன் கூறினார்.