தமிழ் சினிமாவில் எளிதில் ஒருவர் உயர்ந்த இடத்தை அடைவது கடினம். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால், வாரிசு நடிகர்கள் தனது தந்தை அல்லது தாயின் பிரபலத்தை வைத்து, வாய்ப்புகளை எளிதில் பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால், சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் அறிமுகமாகி, தனக்கென்று ஒரு இடம்பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன். முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவருக்கு, ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
அதேபோல, தங்கையான அக்ஷரா ஹாசனும் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தியில் அக்ஷரா நடித்த ‘ஷமிதாப்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் அக்ஷரா சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் அக்ஷரா நடித்திருந்தார்.
பின்னர், இவர் இயக்கிய சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘கடாரம் கொண்டான் திரைப்படத்தில் அக்ஷரா நடித்திருந்தார். தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் அக்னி சிறகுகள் படத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், பிங்கர் டிப் என்ற வெப் சீரிஸ் தொடரிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் கடையில் காண்டம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- ஒரு பெண் தனியே கடைக்கு சென்று காண்டம் வாங்கினால் என்ன தப்பு? அதில் தவறு ஒன்றுமில்லை. சர்ச்சையாகும் அக்ஷரா பேசிய வீடியோ: நீங்கள் பாதுகாப்பாக செய்கிறீர்கள். ஒழுங்காகச் நடக்கிறது என்று தான் அர்த்தம். அதில் என்ன பிரச்சினை? மேலும், இங்கே பெண்கள் செக்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முடியாது என்றும் பெண்களும் மனிதர்கள் தான், என்று அவர் தெரிவித்தார்.
காண்டம் குறித்து அக்ஷரா அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.