திருமணம் செய்யவே பயந்த மருமகள் – மனம் திறந்த நெப்போலியன் மனைவி!

Author:
6 November 2024, 9:36 pm

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நாளை ஜப்பானில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நெப்போலியன் மனைவி தனது மகன் மற்றும் மருமகள் குறித்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் .

அதாவது தன்னுடைய மகனின் உடல்நல குறைகள் அனைத்தையும் நான் என்னுடைய மருமகளிடம் முன்னதாகவே கூறியுள்ளேன். அவருக்கு பிடித்து தான் இந்த திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு முன்னதாக என் மகன் தனுஷும் அக்ஷயாவும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டார்கள் .

napoleon - updatenews360

அவர்கள் தொடர்ந்து செல்போனில் சாட்டிங் செய்ததன் மூலமாக மிகச்சிறந்த காதலர்களாகவும் மாறினார்கள். இருவரும் செல்போனில் பேசுவதை காட்டிலும் இவ்வாறு சாட்டிங் செய்வதில் விருப்பமாக இருந்தனர்.

அக்ஷயா வந்த பிறகு என் மகன் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷம் வந்திருக்கிறது. மேலும் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்த திருமணத்தை நாங்கள் ஜப்பானில் நடத்துவதற்கான காரணம் என்ன என்றால் தனுஷ் சில ஆண்டுகளாகவே ஜப்பானிற்கு செல்ல வேண்டும் என கூறி வந்தார் .

நாங்கள் திருமணத்தை ஜப்பானில் திட்டமிட்டோம். ஆனால் அக்ஷயா ஜப்பானில் திருமணம் என்றவுடன் கொஞ்சம் பயந்துவிட்டார். காரணம் அங்கு உணவு எல்லாம் வேறு மாதிரி இருக்கும்… அது செட் ஆகுமா?என பயந்தார். அதற்கு ஏற்ப திருமண ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக நாங்கள் செய்திருக்கிறோம்.

dhanoosh

இதையடுத்து அக்ஷயா மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். தனுஷின் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷத்தை கொடுத்துள்ளதை பார்த்து ஒரு அம்மாவாக நானும் நிம்மதி அடைந்திருக்கிறேன் என நெப்போலியன் மனைவி ஜெயசுதா மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 111

    0

    0