பாலிவுட்டின் பணக்கார குழந்தை.. மகளுக்காக ரூ.250 கோடி மதிப்பில் அடம்பர பங்களா வாங்கிய ஜோடி..!
Author: Vignesh30 March 2024, 4:33 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.
ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் தங்களுடைய மகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படு வைரலானது.
இந்த நிலையில், தற்போது கூறவரும் தகவல் என்னவென்றால், ரன்பீர் கபூர் – ஆலியா பட் தங்களது மகளுக்காக ரூ. 250 கோடி செலவு செய்து புதிய பங்களா ஒன்று வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, மும்பையில், உள்ள பாந்த்ரா எனும் இடத்தில் தங்களது மகள் ரஹா கபூர் என்கிற பெயரில் தான் இந்த பங்களாவை வாங்கி உள்ளாராம். இதன்மூலம், பாலிவுட்டின் பணக்கார குழந்தை ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்-ன் குழந்தை ரஹா கபூர் தான் என பாலிவுட் பத்திரிகைகளில் கூறி வருகிறார்கள்.