சார் பெஸ்ட் ரைடர்தான்… இருந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன்.. நடிகர் அஜித் பற்றி சக பெண் ரைடர் அலிஷா கருத்து… வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
14 October 2022, 9:36 am

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது தாய்லாந்து பைக் ரைடினை ஆரம்பித்துள்ளார். முன்னதாக பல மாதங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பைக் பயணத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், சிறுவயதில் இருந்தே நடிகர் அஜித்குமார் கார் மற்றும் பைக் ரேசில் ஆர்வம் கொண்டவர். அப்படி அவருடன் நட்பாக பழகியவர்கள் கூட நடிகர் அஜித்குமாரை பற்றி பெருமையாக பேசுவார்கள். மேலும், அவரது பைக் ரேஸ் பற்றியும் பகிர்ந்து கொள்வார்கள். அந்தவகையில், அலிஷா அப்துல்லா அஜித்குமாரின் நீண்ட நாள் பைக் ரேஸ் தோழியாக இருந்தவர்.

Alisha Abdullah_updatenews360

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் அலிஷா அப்துல்லா, “சார் பெஸ்ட் ஆனால் நான் தான் வெற்றி பெருவேன், அஜித் தோல்வி அடைவார்” என்றும் அஜித்திற்கு கீர் பிடிக்க அலிஷா அப்துல்லா தான் கற்றுக்கொடுத்ததாகவும் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

9 வருடத்திற்கு முன் ஆனால் அலிஷா பிரபலமாவதற்கு முன்னமதாக, அஜித் தான் எனக்கு எல்லாமே கற்றுக்கொடுத்தது. அஜித் தான் எனக்கு காட் ஃபாதர், அவருக்கு நன்றி என்று கூறியிருந்தார்.

நெட்டிசன்கள் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் அஜித் வெற்றி பெறவில்லை என்று அலிஷா அப்துல்லா கூறிய சமீபத்திய பேட்டி வீடியோவை வைத்து தற்போது அலிஷாவை கலாய்த்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி