நாங்க காதலித்த காலமெல்லாம் போயிடுச்சு… மனசுல பட்டதை பட்டுனு கூறிய லைலா!

Author: Shree
4 November 2023, 2:00 pm

தமிழ் சினிமா ரசிகர்களை தன் குழந்தை போன்ற எக்ஸ்பிரஷன் கியூட்டான பேச்சு உள்ளிட்டவற்றால் கவர்ந்திழுத்தவர் நடிகை லைலா. இவர் தமிழ்த் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தொடர்ந்து விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்து நல்ல பெயர் வாங்கிய லைலா 2006ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார். சில வருடங்கள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதையடுத்து சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்தார். அடுத்ததாக விஜய்யின் 68வது படத்திலும் கமிட்டாகியுள்ளார். தளபதி 68 பூஜை புகைப்படத்தில் லைலா இடம்பெற்றிருந்தது பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் விஜய் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு நடிக்கப்போவது குறித்து சமீபத்திய பேட்டியில் கேட்டதற்கு, ” நான் திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு தடைபோடவில்லை. எனக்கு அக்கா, அம்மா போன்ற குணசித்திர ரோல்களில் நடிக்கும் வாய்ப்புகளே கிடைத்தது. அதையெல்லாம் நான் வேண்டாம் என கூற பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு சின்னத்திரையில் நடிக்க கேட்டார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை அதனால் தவிர்த்து விட்டேன்.

இப்போதெல்லாம் ஹீரோ ஹீரோயின்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கும் காலமெல்லாம் மாறிடுச்சு. இப்போ ஹீரோயினுக்கும் மிகவும் அழுத்தமான ரோல்களே கொடுக்கிறார்கள். அது போல் தொடர்ந்து தனக்கும் சிறப்பான ரோல்கள் கிடைக்கும் என நம்புகிறேன் என கூறினார். தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் லைலாவை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 449

    0

    0