எல்லா பெண்களுக்கும் அட்லீ மாதிரி புருஷன் கிடைக்கணும்…. மனைவி பிரியா நெகிழ்ச்சி!

Author: Rajesh
2 January 2024, 4:36 pm

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.

priya atlee

அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ தொடர்ந்து திரைப்படம் இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அட்லீ மனைவி பிரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அட்லீ எனக்கு மிகச்சிறந்த கணவர், அட்லீயின் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது எனது அம்மா. அவர் இல்லையென்றால் நான் அட்லீக்கு உறுதுணையாக இருந்திருப்பேனா என்பது தெரியவில்லை.

atlee priya - updatenews360

அவர் எனக்கு நல்ல நண்பர். எனக்கு முதுகெலும்பாக இருந்தது வருகிறார். அத்துடன் என் மகன் மீர் வந்து என்னுடைய வாழ்க்கையை ரொம்பவே மகிழ்ச்சியாக்கிவிட்டான். நாங்கள் அவனுடன் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். அட்லீ எனக்கு சிறந்த கணவராகவும், நல்ல மகனாகவும், நல்ல அப்பாவாகவும், சிறந்த மருமகனாகவும் இருக்கிறார். எல்லா பெண்களுக்கும் அட்லீ போன்று ஒரு கணவர் கிடைக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என பிரியா மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி