ரஜினியின் ரீல் மகள் கைதாவாரா? கொலை மிரட்டல் புகாரால் கோலிவுட்டில் பரபர!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2024, 2:45 pm
பிரபலமானவர்கள் மீது அடிக்கடி ஏதாவது புகார் வருவது இன்றைய காலத்தில் சாதாரண விஷயம். அதே சமயம் சில புகார்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல புகார்கள் வதந்தி என உறுதியாகியுள்ளது.
அப்படித்தான்,”பேராண்மை”, “பரதேசி”, “கபாலி” போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை தன்ஷிகா மீது புதிய சர்ச்சை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்ஷிகாவின் முன்னாள் மேனேஜராக இருந்த பிரியா என்பவர், ட்விட்டரில் சில புகார்களை வெளிப்படுத்தி சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
பிரியாவின் குற்றச்சாட்டுகள் படி, தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் மனைவி கீர்த்தி அனுஷா இணைந்து, பணம் மற்றும் சொத்து வைத்திருப்பவர்களை மிரட்டும் செயலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
மேலும், பிரியாவின் பெற்றோரை மிரட்டுவதால் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக தொடர்ந்து ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: படுத்த படுக்கையில் பிரபல நடிகை… 6 வாரங்களாக ஐசியூவில் சிகிச்சை..!!!
இந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை தன்ஷிகா பதிலளித்து, 2019ல் தான் பிரியாவை மேலாண்மைக் கடமைகளில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவர் குறிப்பிடும் நபர்களை தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
I am here to clarify.@PRO_Priya pic.twitter.com/CRAivHOSKW
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) December 3, 2024
இதேபோலத் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகள் கூறினால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன் என அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.