அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

Author: Selvan
24 December 2024, 6:35 pm

அல்லு அர்ஜுனின் பாதுகாப்பு குழு பற்றி பரபரப்பு தகவல்

புஷ்பா 2 திரையரங்கு பிரச்சனையால் அல்லு அர்ஜுன் தற்போது வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் இன்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Bouncer Anthony legal case

முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு 4 வார ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில் ஒட்டுமொத்த தெலுங்கானா அரசும்,அல்லு அர்ஜுன் மீது புகார்களை கூறி வந்தனர்.தற்போது அவருடைய பவுன்சர் ஆன ஆண்டனி என்பவரை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.

அதாவது அன்றைய சம்பவத்தின் போது அல்லு அர்ஜுன் சுமார் இரவு 9.15 மணிக்கு தியேட்டருக்கு வந்துள்ளார்.அப்போது தியேட்டருக்கு வெளியே ரசிகர்களை சந்தித்துள்ளார்.உடனே அவரை பார்க்க கூட்டம் அலைமோதியது,இதையடுத்து அவரது பவுன்சர்கள் அங்கிருந்தவர்களை கீழே தள்ளியுள்ளனர்.அதுவே நிலைமையை மோசமாகியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!

மேலும் அவருடைய பவுன்சர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்,அவர்களின் ஒரே கவனம் அல்லு அர்ஜுன் மீது மட்டுமே இருந்தது என போலீஸார் கூறியுள்ளனர்.

அவருடைய முக்கிய பவுன்சரான ஆண்டனி பொதுமக்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக,அவர் மீது புகார் வந்துள்ளது.இதன் அடிப்படையில் அவரை தற்போது போலீஸார் கைது செய்து,விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 50

    0

    0

    Leave a Reply