1000 கோடிலா ஒரு சாதனையே இல்ல…புஷ்பா 2-க்கு சவால்…அல்லு அர்ஜுன் ஓபன் டாக்..!

Author: Selvan
13 December 2024, 1:41 pm

புஷ்பா -2 வெற்றி விழா

சுகுமார் இயக்கத்தில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா -2,7 நாள்களில் 1000 கோடி வசூலித்தது.கடந்த டிசம்பர் 5 அன்று வெளிவந்த இந்தப் படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சாதனையை கொண்டாடுவதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அல்லு அர்ஜுன் உருக்கமாக பேசியுள்ளார்.

Pushpa 2 box office collection

இந்த வெற்றி இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. வசூல் சாதனைகள் முறியடிக்கப்படுவது இயல்பு.ஆனால் இந்த சம்மர் சீசனில் நான் இந்த சாதனையை மீண்டும் முறியடிப்பேன்.

இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!

அதுதான் என்னுடைய வளர்ச்சி,இந்த மொழி அந்த மொழின்னு எனக்கு பிரிச்சு பார்க்க தெரியாது,ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வளரவேண்டும்,அதில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று பேசியுள்ளார்.

அல்லு அர்ஜுனின் இந்த உற்சாக பேச்சு,அவரது எதிர்கால படங்கள் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தியுள்ளது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!