அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன்… கதாநாயகி யார் தெரியுமா? மாஸ் அப்டேட்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2025, 3:55 pm

இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். கடைசியாக விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கிய இவர், பின்னர் பாலிவுட் சென்றார்.

இதையும் படியுங்க: நான் சொல்றத நீங்க செய்யுங்க… விஜய்க்கு கண்டிஷன் போட்ட மகன் சஞ்சய்..!!

ஷாருக்கான் உடன் ஜவான் படத்தை இயக்கி சுமார் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மாஸ் காட்டினார். இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தற்போது லயன், சல்மான் கான் உடன் ஒரு படம் என பிஸியாக வலம் வருகிறார்.

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

இருப்பினும் இடையில் தெலுங்கில் படம் இயக்குகிறார். முதன்முறையாக அல்லு அர்ஜூனுடன் இணைய உள்ளார். ஏற்கனவே புஷ்பா படம் 2000 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ள நிலையில் இந்த கூட்டணிக்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Atlee Direct New Film with Allu Arjun

தெலுங்கில் தேவாரா படம் மூலம் தென்னிந்தியா சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • Veera Dheera Sooran Box Office Collection இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!