நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
Author: Selvan22 December 2024, 10:57 am
புஷ்பா 2 விபத்து: அல்லு அர்ஜுன் கண்ணீருடன் விளக்கம்
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.இப்படத்தின் சிறப்பு காட்சி முந்தையநாள் நடைபெற்ற போது அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ள நிலையில்,சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் கோமோ நிலைக்கு போனதாக தகவல் வெளியானது.
முன்னதாக இந்த சம்பவத்துக்காக அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா போலீஸார் நடவடிக்கை எடுத்து,அவரது வீட்டுக்கு திடீரென சென்று கைது செய்தார்கள்.பின்பு ஒரு நாள் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.அவருக்கு பல ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இதையும் படியுங்க: நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
இந்நிலையில்,அவரை தொடர்ந்து பல தவறான கருத்துக்கள் சமூக ஊடங்களில் பரவி வரும் நிலையில்,நேற்று தெலுங்கானா சட்டசபையில் இந்த சம்பவம் குறித்து ரேவந் ரெட்டி விளக்கம் கொடுத்தது மட்டுமல்லாமல்,அல்லு அர்ஜுனை கடுமையாக தாக்கி பேசினார்.
இதன் பின்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அல்லு அர்ஜுன் தன்னுடைய விளக்கத்தை கண்ணீரோடு பகிர்ந்தார்.
ALLU ARJUN reply to road show comments by Revanth Reddy #AlluArjunpressmeet#AlluArjun pic.twitter.com/qttpQgm68R
— Mr Lost 🥁 (@lostsomewhere69) December 21, 2024
இந்த சம்பவத்தை நினைத்து நான் தினம் தினமும் வருத்த படுகிறேன்,தியேட்டர் எனக்கு கோவில் மாதிரி, கடந்த 3 வருடமாக நான் இந்த படத்திற்காக கஷ்டப்பட்டுள்ளேன்.சம்பவத்தன்று எப்போது போல கூட்டம் அலைமோதியது.
நான் என் காரில் இருந்து ரசிகர்களை போக சொன்னேன்.எந்த போலீஸும் என்னை சந்திக்க வில்லை.தியேட்டர் மேலாளர் சொன்னதும் உடனே நான் அங்கிருந்து கிளம்பி சென்றேன்.அங்கு என்ன நடந்தது என்று மறு நாள் தான் எனக்கு தெரிந்தது.
உடனே நான் அந்த சிறுவனை பார்க்க போகிறேன் என்று சொன்னேன்,என்னுடைய வக்கீல்கள் தான் போக வேண்டாம் என்று தடுத்தார்கள்.இப்போது வரை நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்.என்னுடைய பட கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டேன்.நானும் ஒரு குழந்தைக்கு தந்தை தான்,அந்த சிறுவனின் உடல்நிலையை அடிக்கடி விசாரித்து வருகிறேன்,என்று வேதனையோடு அந்த பேட்டியில் கூறியிருப்பார்.