பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
Author: Selvan22 December 2024, 7:14 pm
தெலுங்கானாவில் பரபரப்பு அல்லு அர்ஜுன் வீடு முற்றுகை
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 பிரச்சனையால் ஒட்டுமொத்த தெலுங்கானா தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை தாக்கி வருகிறது.
மிகப்பெரிய வெற்றி படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தை சந்தோசமா கொண்டாடமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.புஷ்பா 2 முதல் நாள் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ரேவதி என்ற பெண்மணி இறந்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது மகனும் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் பல ரசிகர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள்,இதற்கு முழு காரணம் அல்லு அர்ஜுன் தான் என குற்றம் சாடி வந்தனர்.இதற்காக ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறை சென்று வந்துள்ள நிலையில்,நேற்று நடந்த தெலுங்கானா சட்டசபை கூட்டத்தில்,அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ஷெட்டி அல்லு அர்ஜுனை பகிரங்கமாக தாக்கி பேசினார்.அவருக்கு இப்போ என்ன ஆகி விட்டது கை,கால் ஏதும் போய் விட்டதா…?அவரது வீட்டுக்கு சென்று ஏன் ஆறுதல் கூறி வருகின்றனர்.நெரிசலில் உயிரிழந்த பெண்மணி வீட்டை பற்றி கவலைப்பட்டீர்களா என்று பேசி இருந்தார்.
மேலும்,முதல் நாள் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார்.அதை போல் தெலுங்கானா மாநில டிஜிபி மற்றும் துணை ஆணையரும் அல்லு அர்ஜுனை எதிர்த்து கேள்விகளை எழுப்பினார்கள்.அதன் பின்பு அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பை வைத்து அல்லு அர்ஜுன் நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்தார்.என் மேல் எந்த தவறும் இல்லை,தயவு செய்து என்னை பற்றி தவறான கருத்தை பரப்பாதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்க: நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
மேலும் அவருக்கு எதிராக கருத்துக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.அவர் கூட்டிய பிரஸ் மீட்டை கண்டித்து ஏசிபி விஷ்ணுமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.நீதிமன்றத்தி முன் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நடிகர் விசாரணையை பாதிக்கும் வகையில்,பத்திரிகையாளரை சந்தித்து,அவர் நீதிபதி போல் இது தற்செயலாக நடந்தது,என் மேல் எந்த தவறும் இல்லை என்று எப்படி சொல்லலாம் ,இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.
இப்படி பல கோணங்களில் அல்லு அர்ஜுனுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் தற்போது அவரது வீட்டின் முன்பு சில பொதுமக்கள் அல்லு அர்ஜுனை கண்டித்து கோஷங்களை எழுப்பியும்,வீட்டை நோக்கி கற்களை வீசியும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
అల్లు అర్జున్ ఇంటిపై దాడి.
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) December 22, 2024
Attack on #AlluArjun's House. pic.twitter.com/SXj7mgfKvJ
இதனால் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இது அவரது வளர்ச்சியை கண்டு யாரோ போடும் சதித்திட்டம் என அவரது ரசிகர்கள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.