சிறுவன் ஸ்ரீதேஜ்க்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு ஓடிய அல்லு அர்ஜூன்!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2025, 10:53 am
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் திடீர் வருகை.
இதையும் படியுங்க: கறார் காட்டும் வெள்ளி.. இன்றைய தங்கம் விலை என்ன?
ஹைதராபாத் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்து ஹைதராபாத் பேகம்பேட்டில் உள்ள KIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுன் சற்று நேரத்திற்கு முன் நேரில் சென்று சந்தித்து சிறுவனின் உடல்நலம் பற்றி டாக்டர்களுடன் கேட்டறிந்தார்.
அவருடன் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மருத்துவமனைக்கு சென்றார். இந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் ரேவதி ஏற்கனவே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.