புஷ்பாவை விட இரண்டு மடங்கு மாஸ்..அல்லு அர்ஜுனின் அடுத்த பட அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்..!
Author: Selvan31 December 2024, 8:54 pm
புது தோற்றத்தில் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா2 தி ரூல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது.படத்தின் வசூல் 1800 கோடியை நெருங்கி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க படத்தின் சிறப்பு காட்சியின் போது பெண்மணி உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளர் நாகா வம்சி பேசியுள்ளார்.இப்படத்தை பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கவுள்ளார்.இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் தன்னுடைய மொழி,நடை,பேச்சு வழக்கு எல்லாமே மாற்றிக்கொள்ள வேண்டும்,இதற்காக அல்லு அர்ஜுன் புது தோற்றத்தில் நீங்க பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: புத்தாண்டு கொண்டாட்டத்தை வித்தியாசமாக கொண்டாட அஜித் முடிவு…குடும்பத்தோடு எங்கு சென்றுள்ளார் தெரியுமா..!
மேலும் இப்படம் புஷ்பா2-வை விட பல மடங்கு ஹிட்டை கொடுக்கும் என கூறியுள்ளார்.படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது.இதனால் அடுத்த வருடம் அல்லு அர்ஜுனுக்கு இன்னொரு ப்ளாக்பஸ்டர் உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.