குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர், சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர், சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.
இதனிடையே, சினிமா கை கொடுக்கும் வரை சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து பிசினஸ் பார்த்து வரும் நயன்தாரா. தற்போது, தயாரிப்பாளர்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியும் வருகிறாராம். அந்த வகையில், மார்க்கெட்டே இல்லாத போதும் நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக நிர்ணயத்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் ரவுடிதான் படத்திற்கான சைமா விருதுகள் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா வாங்கினார். அப்போது, விருது வாங்குவதற்காக நடிகை ஸ்ரீபிரியா மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மேடைக்கு வந்தனர். விருது வாங்குவதற்கு முன் தன் கணவர் விக்னேஷ் சிவனை பாராட்டிய பின் அவர் கையில் விருதை வாங்க ஆசைப்படுவதாக நயன்தாரா தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், மேடைக்கு வந்த விக்னேஷ் சிவனிடம் அல்லு அர்ஜுன் அந்த விருந்தினை கொடுத்திருக்கிறார். கணவனிடம் விருதினை வாங்கிய மகிழ்ச்சியில் நயன்தாரா சென்று உள்ளார். ஆனால், இந்த சம்பவம் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. மரியாதையே தெரியாத நயன்தாரா என்று திட்டியும் வந்தனர்.
அதன் பின்னர் இப்படி நடத்திய நயன்தாரா மீது அல்லு அர்ஜுன் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தான் நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்க கூடாது என்று எட்டு ஆண்டுகளாக நயன்தாராவை ஒதுக்கி வருவதாகவும், முணுமுணுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் கூட ஒரு படத்தில் நயன்தாரா பெயர் அடிபட்டது அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று அல்லு அர்ஜுன் கண்டிஷன் போட்டுள்ளார். அதன் பின்பு வேறொரு நடிகையை கமிட் செய்து நடிக்க வைத்தார்கள். அதன்பின் மலையாள படமான ராஸ்கல் தி ராஸ்கல் படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதினை வாங்கினார். அதனை அல்லு அர்ஜுன் தான் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.