போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
Author: Selvan24 December 2024, 5:34 pm
சிறப்பு காட்சி அனுமதியை மீறிய அல்லு அர்ஜுன்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு,வசூலை குவித்து வரும் நிலையில் மறுபக்கம் அல்லு அர்ஜுன் மீது குற்ற வழக்குகள் பாய்ந்து வருகின்றன.
அந்த வகையில் முதல் நாள் சிறப்பு காட்சியின் போது ரோகினி என்ற பெண்மணி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்காக அல்லு அர்ஜுனை கைது செய்து,பின்பு 4 வார இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார்.இது குறித்து பல அரசியல் வாதிகள்,காவல் துறையினர் அல்லு அர்ஜூன் மீது பகிரங்கமாக குற்றங்களை தாக்கி வந்தனர்.
இதையும் படியுங்க: அப்புவாக கமல் நடித்தது எப்படி? ரகசியத்தை சொல்லும் அபூர்வ சிங்கீதம் 3 -வது EPISODE…!!
ஒட்டு மொத்த தெலுங்கானா அரசும் இந்த மோசமான நிகழ்விற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என சொல்லி விளக்கம் அளித்து வருகின்றனர்.அல்லு அர்ஜுன் இந்த சிறப்பு காட்சிக்கு செல்ல அனுமதி கேட்ட போது ஐதராபாத் போலீஸார் கூட்டத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.
அதையும் மீறி அவர் தியேட்டருக்கு சென்றுள்ளார்.அதுவும் காரின் மேற்பகுதியை திறந்து வைத்து கைகளை அசைத்த படி சென்றுள்ளார்.அந்த பெண் இறந்த தகவலை கூறிய பிறகும்,அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளியே செல்ல மறுத்துள்ளார்.
படத்தில் பாதியில் இருந்து வெளியேறினால் படம் நன்றாக இல்லை என நினைத்துவிடுவார்கள் என கூறி படம் முழுவதும் பார்த்த பின்பு சென்றுள்ளார்.அதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பதாக போலீசார் தற்போது கூறியுள்ளனர்.இதனால் அல்லு அர்ஜுனுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.