நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்.. சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூன் உருக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2024, 11:25 am
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசுகையில் எனக்கு துணையாக இருந்த அனைவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கவலைப்பட ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் மற்றும் ஒத்துழைப்பேன். கடந்த 20 ஆண்டுகளாக 30 முறைக்கு மேல் எனது திரைப்படம் வெளியாகும் போது செல்வது வழக்கம்.
இதையும் படியுங்க: ’வேண்டுமென்றே ஒரு நாள் சிறை’.. அல்லு அர்ஜூன் பகீர் குற்றச்சாட்டு!
துரதிர்ஷ்டவசமான தற்போது சம்பவம் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் இறந்த குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு எந்த வகையில் துணையாக இருக்க முடியுமோ அவர்களுக்கு இருப்பேன். நடந்ததற்கு வருந்துகிறோம் என அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.