தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார். இந்தியில் கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக marry christmas படத்தில்நடித்தார்.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் வளர்ந்து வரும் திறமையுள்ள பல இயக்குனர்களுக்கு உதவி செய்யும் விதமாக கெஸ்ட் ரோல்களில் நடித்து கொடுப்பேன். ஆனால், எதற்கெடுத்தாலும் அவரை கூப்பிடுங்க என்று நிறைய பேர் வருகிறார்கள். அந்த மாதிரி படங்களால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்துவிடுகிறது.
இதனால் நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இனிமேல் கெஸ்ட் ரோல்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்துவிட்டேன். அதே நேரத்தில் வில்லனாக நடிக்கவும் அதிகம் வாய்ப்புகள் வருகிறது. அதையும் நிறுத்திவிட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அவர் இதை கூறிய ஒரு சில நாட்களிலேயே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தில் வில்லனாக நடிக்க கூறி விஜய் சேதுபதியை அணுகி இருக்கிறாராம் இயக்குனர் சுகுமார். இதனால் அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என விழி பிதுங்கி பார்த்துக்கொண்டிருக்கிறது சினிமா உலகம்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.