ரஜினி – அஜித் காம்போவில் படம்; தயாரா இருக்கு கதை; பிரேமம் இயக்குனரின் அடுத்த புராஜக்ட்,…
Author: Sudha13 ஜூலை 2024, 2:42 மணி
பிரேமம் மற்றும் நேரம் படங்களின் மூலம் புகழ் பெற்றவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். கடந்த 2023 ஆம் ஆண்டு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அந்த பதிவில், அவர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். மேலும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் அல்போன்ஸ் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அப்போது வைரலானதையடுத்து, அதை நீக்கி விட்டார்..
தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அவியல் மற்றும் கோல்ட் போன்ற படங்களை சமீபத்தில் இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து கிபிட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் அல்போன்ஸ் புத்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி, அஜித் ஆகிய இருவரையும் இணைத்து இயக்குவதற்கு ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.ஒருவேளை அவர்கள் அந்த கதையில் நடிக்க மறுத்தால் கமல், சிம்பு ஆகிய இருவரையும் வைத்து அந்த படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0
0